ஆலையடிவேம்பு
பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினால் பெண் சுயதொழில் முயற்சியாளர் ஒருவருக்கு 30,000/- பெறுமதியான நெசவு கைத்தறி இயந்திரம் வழங்கிவைப்பு…

அக்கரைப்பற்று பகுதியின் ஆதிக்கோயிலான கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினால் அக்கரைப்பற்று 8 ஐ சேர்ந்த பெண் சுயதொழில் முயற்சியாளரான திருமதி இலட்சுமி அவர்களுக்கு 30 000/- பெறுமதியான நெசவு கைத்தறி இயந்திரம் இன்று (20) வழங்கப்பட்டது.
குறித்த பெண் சுயதொழில் முயற்சியாளர் இத்தொழிலில் சிறப்புற ஊர்ப்பிள்ளையார் அருள்புரிவாராக என ஆலய திருப்பணிச்சபையினர் பிராத்தித்து வாழ்த்துகின்றனர்.
மேலும் இவ்வாறு நம் சமூகத்தை மேம்படுத்த செய்யப்பட்டு வரும் இவ்வாறான பணிகளுக்கு நிதியுதவி அளிக்க விரும்பும் நலன்விரும்பிகள் எம்மோடு இணையலாம் என பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினர் தெரியப்படுத்துகின்றனர்.