இலங்கை
மேல் மாகாணத்தில் 1563 பேர் கைது

மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 1563 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விசேட சோதனை நடவடிக்கை நேற்று (சனிக்கிழமை) காலை 6.00 மணி முதல் தொடங்கி இன்று காலை 6.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 349பேரும் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 158பேரும் சட்டவிரோத மதுபானக் குற்றச்சாட்டில் 206பேரும், ஐஸ் போதைப்பொருடன் 14 பேரும் ஏனைய குற்றச்சாட்டில் மேலும் சிலரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களில் 771 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.