ஆலையடிவேம்பு
13 தங்கப்பதக்கங்களை பெற்று MBBS இறுதி பரீட்சையில் சாதனை படைத்த அக்கரைப்பற்று தமிழ் மாணவி தணிகாசலம் தர்ஷிகா அவர்கள் வீட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பாராட்டி கௌரவிப்பு…

M.கிரிசாந்
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று தமிழ் மாணவி தணிகாசலம் தர்ஷிகா கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்திருந்தநிலையில்.
இன்றைய தினம் (26) அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராஜபுத்திரன் இராசமாணிக்கம், காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் பல சமூக செயற்பாட்டாளர்கள் என்பவர்கள் சாதனை படைத்த தணிகாசலம் தர்ஷிகா மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை பாராட்டி கௌரவித்ததுடன் மாணவியின் குடும்ப அங்கத்தவர்களுடனும் சினேக பூர்வமாக கலந்துரையாடல் என்பனவும் இடம்பெற்றது.