இலங்கை
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு எல்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம் மற்றும் நீம் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட அவசரகால மனிதாபிமான உதவி வழங்கி வைப்பு

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி மற்றும் பெரும் வெள்ளம் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் ஹாலியல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை பழைய தோட்டக்குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த 110 விதவைகள் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, தோட்ட நல அதிகாரி கலந்து கொண்டு வழங்கி வைத்தனர். இந்நிகழ்வு சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கான நிதியுதவியினை லண்டன் எல்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம் மற்றும் Neem நிறுவனம் வழங்கி வைத்திருந்தனர். இதனை பிரன்லி சிப் பௌன்டேசன் மற்றும் நியூ சன் ஸ்டார் யூத் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.