புளியம்பத்தை மக்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் நேற்று!! மக்கள் எதிர்பார்த்து இருந்த நேசரி பாடசாலை எதிர்வரும் திங்கள் திறப்பதற்கான அதிரடி தீர்மானம்…

ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவானது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட சுமார் 45 குடும்பங்களைக்கொண்ட 200 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துவருகின்ற புளியம்பத்தை கிராமத்திற்கு நேரில் சென்று புளியம்பத்தை கிராம மக்களின் பிரச்சனைகள் பற்றி கேட்டு அறிந்துகொண்டோம்.
அந்த வகையில் அவர்களுக்கான தீர்வுகள் கிடைப்பதற்கான வழிவகைகளை செய்துகொண்டுவருகின்ற நிலையில் நேற்றய தினம் (06.09.2019) மதியம் 12.00 மணியளவில் புளியம்பத்தை மருதயடி பிள்ளையார் ஆலய முன்றலில் புளியம்பத்தை மருதயடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர்,மகாசக்தி அமைப்பினர் மற்றும் எமது ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவினர் கலந்துகொண்டு மக்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. கலந்துரையாடல் இடம்பெறுவதற்கு முன்பாக சிறப்பு வெள்ளிக்கிழமை பூசை ஒன்றும் ஆலய நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ் தெளிவுபடுத்தும் கலந்துரையாடலில் ஆலய நிர்வாக சபையின் எதிர்காலத்திட்டங்கள்,ஆலய புனர்நிர்மாணம் அதற்காக எதிர்காலங்களில் எவ்வாறு நாம் செயற்படுவது மேலும் புளியம்பத்தை மருதயடி பிள்ளையார் ஆலய யாப்பு பற்றிய தெளிவுபடுத்தல்கள் என்பன இடம்பெற்றதுடன் தொடர்ந்து புளியம்பத்தை கிராமத்தின் ஆரம்பநிலை பாடசாலையையில் இருக்கும் குறைகளை முடிந்தவரை திருத்தி அமைத்து எதிர்வரும் திங்கள்கிழமை ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் சிறந்த அதிரடி தீர்மானமும் எட்டப்பட்டது.
திங்கள் அன்று ஆரம்பமாக இருக்கும் பாடசாலையின் இன்றைய நிலை.
இதனை திருத்தி அமைப்பதற்கு உதவி செய்யவிரும்புவார்கள் எமது இணையக்குழுவுடன் தொடர்வை ஏற்படுத்தவும்.