புத்தாண்டு காலத்தில் பின்பற்ற வேண்டிய புதிய கட்டுப்பாடுகள்! வெளிவந்த அறிவித்தல்

எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
இதன்படி கொண்டாட்டங்கள் மற்றும் சடங்குகளை வீட்டுக்குள் மட்டுப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன,
மத ஸ்தலங்களுக்குச் செல்லும்போது கொரோனாவைத் தடுக்கு சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். அத்துடன் இசைக்கச்சேரிகளையும் மற்றும் புத்தாண்டு நிகழ்வுகளையும் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
அதிக எண்ணிக்கையான மக்களுடன் மேடை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உறவினர், அயலவர்களின் இல்லங்களுக்குச் செல்வதைக் குறைத்துக் கொள்ளுமாறும் வரையறைகளுடன் விருந்துகளை பரிமாறிக் கொள்ளுமாறும் குறிப்பிட்ட எண்ணிக்கையான பாரம்பரிய விளையாட்டுகளை மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருட்கொள்வனவுக்காகச் செல்லும்போதும் அங்கிருந்து வெளியேறும் போதும் சுகாதார அமைச்சினால் விதிக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறுதல் அவசியம்.
மேலும் பாரம்பரிய விளையாட்டுகளை நடத்துதல் கொரோனா வைரஸ் பரவ வழிவகுக்கும். இதேவேளை வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களுடன் மரதன் ஓட்டம் மற்றும் சைக்கிள் சவாரிகளை ஒழுங்கு செய்ய பரிந்துரைத்துள்ளனர்.
புதிய கட்டுப்பாடுகள் நாட்டின் தற்போதைய நிலைமைகளை அவதானித்தே விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.