இலங்கை
நாடாளுமன்ற விவாதத்தின்போது பதற்ற நிலை: எதிர்கட்சிக்கு எதிராக ஆளும்தரப்பு போராட்டம்!

அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தின்போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் பத்து நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு நிற உடையணிந்து போராட்டம் நடத்தியதால் சபையில் பதற்றம் தொடங்கியது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் ஆசனத்தில் இருந்து எழுந்துவந்து எதிர்க்கட்சியை நோக்கி கோஷம் எழுப்பினர்.
அத்தோடு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக பதாகைகளையும் ஏந்தியவாறு அரசதரப்பு உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.