புதிய லங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளர் விபரம் – ஆலையடிவேம்பு பிதேச சபை தேர்தல்

நாட்டில் நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் எமது ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஒன்பது அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழு உள்ளடங்கலாக 10 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்திய நிலையில் போட்டியிடுகின்றன.
தேர்தலில் வாக்களிக்க அண்ணளவாக 19,400 வாக்காளர்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படுவதுடன் ஆலையடிவேம்பு பிரதேச சபை 10வட்டாரங்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றது.
இவ்வாறு இருக்கின்ற நிலையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற சமூக நோக்குடன் கட்டுப்பணம் செலுத்தி போட்டியிட இருக்கின்ற 10 குழுக்களிலும் இருந்து ஒவ்வொரு குழுவினரின் உத்தியோக பூர்வ வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை கட்டம் கட்டணமாக பதிவிட இருக்கின்றோம்.
அந்த வகையில் புதிய லங்கா சுதந்திரகட்சியில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் 10 தொகுதிகளிலும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை காணலாம்.
புதிய லங்கா சுதந்திரகட்சி சின்னம் (முயல்)
அக்கரைப்பற்று A – கந்தசாமி சகித்தன்
அக்கரைப்பற்று B – சிவலிங்கம் துசிதா
அக்கரைப்பற்று D- இளைய தம்பி தியாகராஜா
ஆலையடிவேம்பு – நல்லதம்பி பாஸ்கரன்
கோளாவில் C – பேமரெட்ண பண்டா
அக்கரைப்பற்று C- கணபதிப்பிள்ளை லதன்
கோளாவில் A – கணேசபிள்ளை ரகுபதி
கோளாவில் B – கந்தையா ரசிகரன்
பனங்காடு – மகேஸ்வரன் டிசோகாந்த்
கண்ணகி கிராமம் – லோகிதன் டினேஸ்கரன்