இலங்கை
சீனாவிடம் மீண்டும் பில்லியன் கணக்கில் கடன் பெறவுள்ள அரசாங்கம்.

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
சீனாவிடம் இன்னும் பில்லியன் கணக்கான ரூபாவை கடனாக பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனை கூறியுள்ளார்.
இதனடிப்படையில், சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து $1 Billionயையும் ( சுமார் 18 ஆயிரம் கோடி ரூபா ) , 2 Billion யுவானையும் ( சுமார் 5,000 கோடி ரூபா ) கடனாக பெற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
குறிப்பாக கடன் தவணையை செலுத்தவும் அரசாங்கத்தின் மூலதன செலவுகளை ஈடு செய்ய இந்த கடனை பெற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இந்த கடன் 3 வருட நிவாரண காலத்தின் பின் 10 வருடங்களுக்குள் செலுத்தி முடியும் அடிப்படையில் பெற்றுக்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.