இலங்கை
அக்கரைப்பற்றில் சிக்கிய போலி 5000 ரூபா நாணயத்தாள்கள்!

அக்கரைப்பற்று- நிந்தவூர் பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட போலி நாணய தாள்கள அச்சடித்த இடமொன்றை சுற்றிவளைத்த போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மூவரும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
இராணுவ குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது 5000 ரூபா தாள்கள் 124 ம், முழுமையாக அச்சிடப்படாத 5000 ரூபா தாள்கள் 20 ம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மோட்டார் வாகனமொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதில் கைதான சந்தேக நபர் ஒருவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னரும் கள்ள நோட்டுக்களை அச்சடித்து விநியோகித்த குற்றச்சாட்டில் கைதாகி விடுதலையானவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.