சுவாரசியம்
பிளாஸ்ரிக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட அற்புத தீவு

ஐவோரி கோஸ்ட் பகுதியில் பிளாஸ்ரிக் கழிவுகளை கொண்டு செயற்கை தீவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸினைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரினாலேயே பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் கழிவுகளை கொண்டு குறித்த தீவு உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தகர் பிளாஸ்ரிக் 700, 000 போத்தல்களைக் கொண்டு நீச்சல் குளங்கள், சிறிய வீடுகளை கொண்ட சிறிய தீவை உருவாக்கி, சூரிய ஒளி மின்னுற்பத்தி மூலம் மின்சார வசதி செய்து கொடுத்துள்ளார் .
குறித்த தீவிற்கு வாரம் ஒன்றுக்கு சுமார் 100 பேர் வரையில் வருகை தருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.