இலங்கை
ஒத்திவைக்கப்பட்டப உயர்தரப் பரீட்சை: விசேட அறிவிப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சைகள் நடைபெற மாட்டாது என தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம், 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.