ஆலையடிவேம்பு
கண்ணகி கிராம மலை உடைப்பு சம்பவம்: பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கள விஜயம்….

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கண்ணகி கிராமத்தில் காணப்படுகின்ற மலை உடைப்பு சம்மந்தமாக கண்ணகி கிராம மக்களின் முறைப்பாட்டின் பிரகாரம் அம்பாறை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்கள் அண்மையில் நேரில் அப்பிரதேசத்துக்கான கள விஜயம் மேற்கொண்டு இருந்தார்.
கள விஜயத்தில் மக்களுடன் இது தொடர்வாக கலந்துரையாடியதுடன் குறித்த மலை உடைப்பு செயற்பாடுகளை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை அன்றைய தினமே முன்னெடுத்தும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.