அரச அலுவலங்களுக்குள் நுழைகின்ற அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை – முகக்கவசம் கட்டாயம் ஆலையடிவேம்பு பிரதேசங்களிலும் விழிப்பூட்டும் செயற்பாடுகள்

வி.சுகிர்தகுமார்
இதற்கமைவாக அரச அலுவலங்களுக்கு வருகை தருகின்ற அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் அலுவலங்களுக்குள் நுழைகின்ற அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனையும் இடம்பெற்று வருகின்றது.
அவசியமற்ற விதத்தில் அலுவலங்களுக்கு மக்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
அதுபோல் களப்பணிகளில் ஈடுபடுகின்ற கள உத்தியோகத்தர்களின் கடமையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் பிரதேச செயலகம் ஊடாக ஒலிபெருக்கி மூலம் மக்களை விழிப்பூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் சமய ஸதலங்களின் ஊடாகவும் பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் பிரதேச செயலலாளர் வி.பபாகரனும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதுவரை காலமும் எமது மிகச் சிறந்த செயற்பாடுகள் காரணமாக நாம், நமது குடும்பம் மற்றும் நமது நாடு முழுவதும் உயிர்கொல்லி நோயான ஊழுஏஐனு-19 வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட்டோம்.
இருப்பினும் இக்கொடிய COVID-19 வைரஸ் தாக்கம் மீண்டும் தற்போது எமது நாட்டினை சவாலுக்குள்ளாக்கியுள்ளது. எனவே இதுவரைகாலமும் உலகில் பத்து இலட்சம் உயிர்களுக்கு மேல் காவு கொண்ட கொடிய COVID-19 வைரஸ் பரவலிலிருந்து நாமும் நமது அன்புக்குரியவர்களும் பாதுகாப்பாயிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் நோய்த்தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எம்மையும் எமது அன்புக்குரியவர்களுக்கும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய இக்கொடிய COVID19 வைரஸ் கிருமிப் பரவலிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுப்போம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.