திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் குடிநீர் செயற்திட்டம் – 2022 திறப்புவிழா….

ஆலையடிவேம்பு பிரதேச திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் குடிநீர் செயற்திட்டம் – 2022 திறப்புவிழா இன்று (07.10.2022) வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்கள் தலைமையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக திரு.y.ஜெயச்சந்திரன் (வலயக்கல்வி பணிப்பாளர்,திருக்கோவில்), சிறப்பு அதிதிகளாக செல்வி.S.அனுஷியா( சிவனருள் பவுண்டேசன், தலைவி), திரு.v வாமதேவன் (சிவனருள் பவுண்டேசன், செயலாளர்) மற்றும் அதிதிகளாக ஆலையடிவேம்பு கோட்டத்திற்கு உற்பட்ட பாடசாலை அதிபர்கள் என்பவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
திகோ/புனித சவேரியார் வித்தியாலய குடிநீர் செயற்திட்டம் – 2022 இல் பெறுமதி மிக்க நீர்வடிகாட்டல் இயந்திரம், 50 அடி ஆழம் கொண்ட குழாய் நீர் இணைப்பு, கிணறு சுத்திகரிக்கப்பட்டு அதனை மூடுவதற்கான வேலைப்பாடு, நீர்த்தாங்கி அமைக்கப்பட்டமை, நீர் மோட்டார் இயந்திரம் மற்றும் நீரை பெற்றுக்கொள்வதற்கான நீர் குழாய் இணைப்புக்கள் என பல செயற்பாடுகள் உள்ளடங்கப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த நிகழ்வுக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து இருந்தனர்.