இலங்கை
வேலையற்ற பட்டதாரிகளுக்கான பயிற்சி காலவரையின்றி ஒத்திவைப்பு


அரச வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஏற்ப ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலையற்ற பட்டதாரிகளுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படவிருந்தது.
இந்த நிலையில், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



