ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பிரதேச மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்…

“அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளின் பெயர் பட்டியல் ஒழுங்கு முறையாக தெரிவுசெய்யப்படாமல் முறைகேடாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் மிகவும் வறுமையான குடும்பங்கள், விதவைகள், ஊனமுற்றோர், மற்றும் கல்வி கற்கும் மாணவர்கள் உள்ள குடும்பங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பிரதேச பொதுமக்கள் இன்று (23) காலை சுமார் ஒரு மணிநேரம் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் மக்கள் பிரதேச செயலகத்திற்கு உள்சென்று குறித்த விடயங்களை அறிவித்த போது இதற்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையெனவும் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் மேன்முறையீடு செய்ய முடியும் எனவும் எதிர்வரும் திங்களன்று பிரிவு ரீதியாகவுள்ள கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் காரியாலயத்திற்கு சென்று தங்களது மேன்முறையீட்டினை கையளிக்குமாறும் கூறியதாகவும் பிரதேச பொதுமக்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.