டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனையொன்றை பதிவுசெய்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இடது கை துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்க செய்த பந்து வீச்சாளராக அஸ்வின் தனது பெயரை பதிவுசெய்துள்ளார்.
மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ரண்டாவது இன்னிங்சில் ஜோஷ் ஹேசில்வுட்டை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் இந்த சாதனையை பதிவுசெய்தார்.
அஸ்வின் இதுவரை 192 இடது கை துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது இலங்கையின் முத்தையா முரளிதரனின் 191 பேரை விட சிறந்ததாகும்.
அஸ்வின் 73 டெஸ்ட் போட்டிகளில் இருந்து 25.22 சராசரியாக 375 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இடது கை துடுப்பாட்ட வீரர்களை அதிக ஆட்டமிழக்க செய்தவர்கள் பட்டியலில் 186 விக்கெட்டுகளுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் மூன்றாவது இடத்திலும், அவுஸ்ரேலியாவின் கிளென் மெக்ராத் 172 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்திலும் அவுஸ்ரேலியாவின் ஷேன் வோர்ன் 172 விக்கெட்டுகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.