திருகோணமலை துறைமுகத்தில் ரயில் பாதை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

திருகோணமலை துறைமுகத்தில் 1.5 கிலோமீட்டர் ரயில் பாதை அமைத்தல் மற்றும் திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடலொன்று திருகோணமலை துறைமுகத்தல் இடம்பெற்றது.
துறைமுக மற்றும் கடற்படை விவகார அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, துறைமுக மற்றும் கடற்படை அமைச்சின் செயலாளர், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கபில நுவன் மற்றும் பலர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பயனுள்ள அபிவிருத்தி திட்டத்தை அமைப்பதற்கான திட்டத்தில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகளை நிர்மாணிக்கவும் புனரமைப்பதற்கும் ஒரு முன்னணி குழுவை நியமிக்க உத்தேசிக்கப்பட்டது.
இதன் மூலமாக திருகோணமலையில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், துறைமுக சுற்றுப்பயணத்தின் போது திருகோணமலை துறைமுகத்தின் பச்சை துறைமுகம் என்ற கருத்தை மேம்படுத்துவதற்காக திருகோணமலை துறைமுகத்தில் மரம் ஒன்றும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.