ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் க.பொ.த சாதாரண மாணவர்களின் பெற்றோர்களினால் பாடசாலைக்கு நவீன வாதிகள் கொண்ட போட்டோ பிரதி இயந்திரம் வழங்கி வைப்பு….

அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் இவ்வருடம் பரீட்சை எழுதும் க.பொ.த சாதாரண மாணவர்களின் பெற்றோர்களினால் குறித்த பாடசாலை மாணவர்களின் விசேட செயற்பாடுகள் மற்றும் அடைவு முன்னேற்றம் கருதி விலையுயர்ந்த நவீன வாதிகள் கொண்ட போட்டோ பிரதி இயந்திரம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
இவ் நிகழ்வு இன்றைய தினம் (18) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் பாடசாலையில் வைத்து பாடசாலையின் அதிபர் திரு. J. R. டேவிட் அமிர்தலிங்கம் அவர்களிடம் குறித்த மாணவர்களின் பெற்றோர்களினால் போட்டோ பிரதி இயந்திரம் கையளிக்கப்பட்டது.
மேலும் இவ் நிகழ்வில் பாடசாலையின் அதிபர், பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.