ஆலையடிவேம்பு
சுவாட் அமைப்பின் 2026ம் ஆண்டிற்கான புத்தாண்டு நிகழ்வு….

2026ம் ஆண்டிற்கான புத்தாண்டு நிகழ்வு சுவாட் அமைப்பின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான ச.செந்துராசா அவர்களின் தலைமையில் சுவாட் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (01.01.2026) இடம்பெற்றது.
சுவாட் அமைப்பினால் கடந்த 31 வருடங்களாக செயற்படுத்தப்பட்ட சேவைகள் தொடர்பில் சமர்ப்பணம் செய்யப்பட்டதுடன், சிறந்த செயற்பாட்டாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் பிரதேச மட்ட சமூக ஆர்வலர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், சுவாட் அமைப்பின் ஆளுனர்சபை உறுப்பினர்கள், தெரிவு செய்யப்பட்ட கிளைத் தலைவிகள் மற்றும் பணியாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.



