புளியம்பத்தை மக்களின் குமுறலுக்கு ஒரே நாளில் தீர்வு!!! இணையத்தளத்திற்கு தங்கள் மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் தெரிவிப்பு

நேற்றைய தினம் ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவானது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட சுமார் 45 குடும்பங்களைக்கொண்ட 200 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துவருகின்ற புளியம்பத்தை கிராமத்திற்கு நேரில் சென்று புளியம்பத்தை கிராம மக்களின் பிரச்சனைகள் பற்றி கேட்டு அறிந்துகொண்டோம்.
அவர்கள் கூறிய முக்கிய பிரச்சனைகளில் சில 3 தொடக்கம் 5 வயதை உடைய ஆரம்பப்பாடசாலைக்கு (நேசரி பாடசாலை) செல்லும் பிள்ளைகள் 15 தொடக்கம் 20 பிள்ளைகள் இருக்கின்றார்கள் அவர்களை கல்வி கற்பதற்கு அனுப்புவதட்கோ நேசரி பாடசாலை தற்போது இல்லை எனவும் , சுமார் 45 குடும்பங்கள் வசிக்கும் கிராமத்திற்கு கிழமைக்கு இருதரம் 5000 லீட்டர் படி மொத்தமாக கிழமைக்கு 10,000 லீட்டர் நீரே ஆலையடிவேம்பு பிரதேச சபையினரால் கிடைக்கின்றது போதாதது எனவும், ஊருக்கென ஓர் ஆலயம் இருக்கின்ற போதிலும் புனர்நிர்மாணம் செய்து கொள்ளமுடியாத நிலை, போதிய அளவு வாழ்வாதார உதவிகள் கிடைப்பதில்லை , எங்களுக்காக நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகள் எங்களை கண்டுகொள்வது இல்லை என விடயங்களை தெரிவித்தார்கள்.
அவர்கள் பிரச்சனைகள் பற்றி கூறும்போதே பலர் பலவருடங்களாக வந்து எங்கள் பிரச்சனைகளை கேட்டுச்செல்வதுடன் நின்றுவிடுகின்றார்கள் எங்களுக்கு தீர்க்கமான தீர்வுகளை பெற்று தருவதேயில்லை என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் நாங்கள் அவர்கள் பற்றிய பிரச்சனைகளை இணைதளத்தில் பதிவு இட்டு இருந்தோம் அதுமாத்திரம் இல்லாமல் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் அமைப்புகளுடனும் நேரில் சென்று புளியம்பத்தை கிராம மக்கள் பிரச்சனைகள் பற்றி அறியப்படுத்தி அதுமாத்திரம் இல்லாமல் அவர்களிடம் இருந்து சாதகமான பதில்களையும் பெற்றுக்கொண்டோம்.
நேசரி பாடசாலை அமைப்பதட்கு அறம் வழி அறக்கட்டளை மற்றும் மகாசக்தி அமைப்பினரிடம் கலந்துரையாடி அதற்கான சாதகமான பதிலைபெற்று காலம் தாழ்த்தாமல் உடனடியாகவே மகாசக்தி அமைப்பினர், புளியம்பத்தைக்கு பொறுப்பான கிராம அலுவலக உத்தியோகத்தர், புளியம்பத்தை கிராம மக்கள்,நேசரி பாடசாலையில் கல்விகற்க இருக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் என்பவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இணையக்குழுவும் நேரில் சென்று நேற்று மாலை புளியம்பத்தை கிராமத்தில் கலந்துரையாடல் இடம்பெற்று கலந்துரையாடல் ஆனது முக்கிய கலந்துரையாடல் ஆக உருவம்பெற்று புளியம்பத்தை கிராம குழந்தைகளுக்கு ஓர் இரு வாரங்களில் நேசரி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு படிப்பதட்கான வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டது.
பல உதவிகளை செய்துகொண்டுவரும் அறம் வழி அறக்கட்டளை அமைப்பினரும் நேசரி பாடசாலை மீள அமைப்பதற்கான உதவிகளை செய்வதாகவும் இணையக்குழுவினருக்கு உறுதியளித்தார்கள்.
மேலும் ஆலய புனர்நிர்மாணத்துக்கான உதவிகளை இணையக்குழு வழங்குகின்றோம் எனவும், ஆலய நிர்வாகக்குழு இயங்கவேண்டிய முறைமைபற்றிய அதிகாரிகளின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொடுத்தோம்.
நீர் பிரச்சனை தொடர்பில் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையினர் இடம் பேசியபோது அவர்களால் முடிந்த சேவையை செய்துகொண்டு இருப்பதாகவும் மேலும் நீர் விநியோகத்தை அதிகரிப்பதட்கான முயசியை எடுப்பதாகவும் கூறி இருந்தார்கள்.
எங்களுக்காக நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகள் எங்களை கண்டுகொள்வது இல்லை என்ற விடயத்திட்கும் குறித்த அதிகாரி பற்றி உயர் அதிகாரியிடம் தெரிவித்து அந்த விடயத்திட்கும் தீர்வினை நாங்கள் பெற்றுக்கொடுத்தோம்.
புளியம்பத்தை கிராம மக்கள் ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவிற்கும் Alayadivembuweb.lk இணையத்தளத்திற்கும் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றிகளையும் தெரிவித்தார்கள்.