ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளரின் தலையீட்டில் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மீண்டும் எரிபொருள் வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு…..

எரிபொருள் விலை இன்று இரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்த தகவலினைதொடர்ந்து அதிக நபர்கள் எரிபொருட்களை பெற்றுக்கொண்டதினால் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் முடிவடைந்தது அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கப்படும் எரிபொருள் மாத்திரமே உள்ளது என கூறி எரிபொருள் வழங்கும் செயற்பாடு இடை நிறுத்தப்பட்டது.
எனினும் பலர் அங்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் காத்திருந்ததுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து எரிபொருள் நிரப்பு நிலையத்தினருடன் உரையாடியதனைத்தொடர்ந்து வாகனமொன்றுக்கு 1,000/- வீதம் எரிபொருள் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.