பிசிஆர் பரிசோதனை நடவடிக்கை- ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தலைமையில்

வி.சுகிர்தகுமார்
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு செயற்றிட்டங்களை அரசாங்கமும் சுகாதார அமைச்சும் சுகாதார திணைக்களமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றது.
இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ள நாடு என்னும் ரீதியில் இலங்கை நாடும் உலகநாடுகள் மத்தியில் பேசப்படுவதுடன் பாராட்டினையும் பெற்று வருகின்றது.
இதற்கமைவாக தற்போது கிராமங்களிலும் கொரோனா தொடர்பான பிசிஆர் பரிசோதனை நடவடிக்கையினை சுகாதார திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் வாழும் மாணவர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் சேவையாளர்களுக்குமான பிசிஆர் பரிசோதனை நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தலைமையிலான வைத்திய குழுவினர் இப்பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது அங்கு தங்கிவாழும் மாணவர்களுக்கும் சேவையாளர்களுக்கும் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் பல்வேறு ஆலோசனைகளும் வைத்திய அதிகாரி எஸ்.அகிலனினால் வழங்கி வைக்கப்பட்டது.