ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த ஆனிப்பௌர்ணமி மகோற்சவம் கொடியேற்றம்….

அக்கரைப்பற்று, ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய 2024 ஆம் ஆண்டிற்கான ஆனிப்பௌர்ணமி மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று (12) காலை சிறப்பாக இடம்பெற்றது.
மகோற்சவ நிகழ்வுகள் 2024.06.11ஆம் திகதி பூர்வாங்க கிரியைகளோடு ஆரம்பமாகி இன்றைய தினம் இடம்பெற்ற கொடியேற்ற நிகழ்வை தொடர்ந்து 9 நாட்கள் இடம்பெறும் விசேட திருவிழாக்கள் 21ஆம் திகதி இடம்பெறும் சமுத்திர தீர்த்தோற்சவம் 22ஆம் திகதி இடம்பெறும் பூங்காவனம் 23 ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூஜையுடன் இவ்வருட மகோற்சவம் இனிதே நிறைவுறுகின்றது.