“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் மாணவர் கல்வி மேன்பாட்டு திட்டம் – 2022 மாதிரி வினாத்தாள் பொதி வழங்கும் முதல்கட்ட நிகழ்வு….

“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் இந்த வருடம் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களும் பயன்பெரும் முறையில் மாதிரி வினாத்தாள் பொதிகள் சென்றடைய வேண்டும் என்ற தொனிப்பொருளில் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் முதல்கட்டமாக இன்று (28.10.2022) வெள்ளிக்கிழமை நண்பகல் 03.00 மணியளவில் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் உள்ளடங்கும் வகையில் சிறப்பு இலவச வகுப்பு அக்கரைப்பற்று கமு/திகோ/விவேகானந்த வித்தியாலயத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த மாணவர்கள் பயன் பெரும் வகையில் மாணவர் கல்வி மேன்பாட்டு திட்டம் – 2022 மாதிரி வினாத்தாள் பொதி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் பொதி வழங்கும் நிகழ்வில் குறித்த இலவச வகுப்பினை நடத்தி வருபவர்களில் ஒருவரான பிரபல ஆசிரியர் S.பிரபாகரன், மாணவர்கள் மற்றும் “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் கலந்துகொண்டு இருந்தனர்.
நிகழ்வில் குறித்த மாதிரி வினாத்தாள் பொதி வழங்குவதற்கு முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கின்ற சத்தியமூர்த்தி “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் அவர்களுக்கு நன்றிகள் மற்றும் அவரின் தொடர் சேவைகளுக்கான வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வாறு வழங்கப்படுகின்ற வினாத்தாள் பொதியை திருக்கோவில் கல்வி வலய ஆரம்ப பிரிவுக்கான உதவிக்கல்வி பணிப்பாளர் P.பரமதயாளன் அவர்கள் மற்றும் அக்கரைப்பற்று கமு/திகோ/விவேகானந்த வித்தியாலய பிரபல ஆசிரியர் S.பிரபாகரன் அவர்கள் தயாரித்து இருந்தார்கள்.