இலங்கை
பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மஹா மகோற்சவப் பெருவிழா இன்று ஆரம்பம்!

-யனோஷன்-
வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை ,பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மஹா மகோற்சவப் பெருவிழா இன்று (20) செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன்
ஆரம்பமாகியது.
இன்று மாலை திருக்கதவு திறத்தலும்,கடலுக்குச் சென்று ஆராதனை செய்து ஊர் ஆராவாரம் பண்ணி ஊர்வலம் வருதலுடன், ஆராதனையுடன் கொடியேற்றல் இடம்பெற்றது.
எதிர்வரும் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை வீரகும்பம் நிறுத்தலும், தீ மூட்டுதலும். பிற்பகல் கடல் குளித்தலும் , மஞ்சள் குளித்தலும், அதனைத் தொடர்ந்து தீ மிதித்தல் வைபவம் நடைபெற இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.