ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பவர் விளையாட்டுகழகம் நடாத்திய கிரிக்கட் சுற்றுத்தொடரில் ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனானது….

அக்கரைப்பற்று பவர் விளையாட்டுகழகம் ஏற்பாடு செய்து நடாத்திய ஆலையடிவேம்பு பிரதேச கழகங்களை உள்ளடக்கி மென்பந்து கிரிக்கட் சுற்றுத்தொடர் இடம்பெற்றுவந்தது.
குறித்த கிரிக்கட் சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவாகியது.
பவர் விளையாட்டுகழக கிரிக்கட் சுற்றுத்தொடரின் ஆட்டநாயகனா அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் தினேஷ் தெரிவுசெய்யப்பட்டதோடு இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக தேவதர்ஷன் அவர்களும் தெரிவாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.