
2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாடசாலைத் தவணை இன்றுடன் (07) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இன்று முதல் விடுமுறைக்காக மூடப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று நிறைவடைவதுடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாவது தவனை எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவடைவதுடன், மூன்றாம் தவணை 25 ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.