சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முயன்ற வடக்கு இளைஞர் கைது

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, இத்தாலிக்குச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் இலங்கை இளைஞரை, கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கட்டார்- தோஹா வழியாக இத்தாலிக்கு செல்ல முயன்ற குற்றச்சாட்டில் போலி குடியிருப்பு கடவுச்சீட்டுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இளைஞரின் கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை உட்படுத்தி மேலதிக விசாரணையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, இத்தாலியில் வசிக்கும் ஒருவரின் விபரங்களையும் அவரது புகைப்படம், விசா அட்டை மற்றும் கடவுச்சீட்டை மட்டுமே இதற்காக பயன்படுத்தியதாகவும் அந்த இளைஞர் தெரிவித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் மன்னார்- வெல்லாங்குளத்தில் வசிக்கும் 26 வயதுடையவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.