பவுன்சர் யுத்தத்தில் கவனம் செலுத்தப்போவதில்லை- அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர்

அவுஸ்திரேலிய அணி ஆசஸ் தொடரில் பவுன்சர் யுத்தத்தில் கவனம் செலுத்தாது என அணியின் பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியை தோற்கடித்து தொடரை கைப்பற்றுவதற்கான எங்களின் திட்டம் என்னவென்பது எங்களிற்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள லாங்கர்,யார் வேகமாக பவுன்சர் வீசுகின்றர் என உணர்ச்சிகரமான மோதல்களில் நாங்கள் சிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் இங்கு டெஸ்ட் போட்டிகளை வெல்வதற்காகவே வந்துள்ளோம் எத்தனை தரம் தலைக்கவசங்களை தாக்கலாம் என்பதற்காக வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக வெற்றிபெறும் என நாங்கள் கருதும் அணியையே நாங்கள் தெரிவுசெய்வோம்,என தெரிவித்துள்ள ஜஸ்டின் லாங்கர் எனினும் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்தும் பவுன்சர் பந்துகளை பயன்படுத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
பவுன்சர் பந்துகளின் மூலம் விக்கெட்களை வீழ்த்த முடியும் என்றால் நாங்கள் அதனை பயன்படுத்துவோம் எனவும் லாங்கர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஜொவ்ரா ஆர்ச்சரின் பவுன்சரினால் தாக்கப்பட்டமை பவுன்சர் பந்துகள் மீது கவனத்தை திருப்பியுள்ள நிலையிலேயே லாங்கரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.