ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியியங்கி மீள் நிரப்பு இயந்திரம் இன்று திறந்து வைக்கப்பட்டது

(வி.சுகிர்தகுமார்)
மக்கள் நலன் கருதி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியியங்கி மீள் நிரப்பு இயந்திரம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கணக்காளர் கே.கேசகன் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.நடனகுமார் குறித்த இயந்திரத்தினை பொருத்துவதில் பெரும்பங்காற்றியவரும் வழிநடத்துனருமான பி.ரகுபவன் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் தானியியங்கி மீள் நிரப்பு இயந்திர சேவையினை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த இயந்திரத்தின் மூலம் தொலைபேசி கட்டணங்கள், ரீலோட், மின்சாரக் கொடுப்பனவு குடிநீர் கொடுப்பனவு காப்பறுதி கட்டணங்கள் உள்ளிட்ட 24இற்கும் மேற்பட்ட கொடுப்பனவுகளை செலுத்தலாம் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
குறித்த இயந்திரம் பொருத்தப்பட்டதன் மூலம் அதிகளவான மக்கள் நன்மையடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.