‘சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம்’ அமைப்பின் ஊடக திகோ/இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலய விசேட கல்வி அலகில் பயின்றுவரும் 16 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…..

திகோ/இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலயத்தில் செயற்பட்டுவரும் விசேட கல்வி அலகில் பயின்றுவரும் 16 விசேட தேவையுள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி. R.நித்தியானந்தன் அவர்கள் தலைமையில் வித்தியாலய விசேட கல்வி அலகில் (2022.06.10)ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அக்கரைப்பற்று கோளாவிலை பிறப்பிடமாகவும் தற்போது லண்டன் நகரில் வசித்து வருபவருமான திரு. சத்தியமூர்த்தி ‘சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம்’ அமைப்பின் ஸ்தாபகர் சமூக சேவையாளரின் மனைவியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு அவரின் மகனின் ரூபா 21,000 அன்பளிப்பின் மூலம் எமது மாணவர்களுக்கு இக்கற்றல் உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வித்தியாலய அதிபர், பிரதி அதிபர், விசேட கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.
இந்த வகையில் பாடசாலை மாணவர்களுக்கு இக்கற்றல் உபகரணங்களை அன்பளிப்புச் செய்தமையையிட்டு அன்னாரின் குடும்பத்தாருக்கு மாணவர்கள் சார்பாகவும், பாடசாலைச் சமூகம் சார்பாகவும் பாடசாலையின் அதிபர் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றார்.