உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் அம்பாரை மாவட்ட கிளை அங்குரார்ப்பண நிகழ்வு 27ஆம் திகதி ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில்…

வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள தமிழ் கலைஞர்கள் அனைவரையும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக்குழுவினர்.
உலகத்தில் பரந்து வாழும் தமிழ் கலைஞர்கள் அனைவரும் ஓரணியாய் பேரணியாய் திரளும் மாபெரும் ஒன்று கூடல் 2021 ஆம் ஆண்டு திருகோணமலையில் உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவை ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
இதனை முன்னிட்டு நிகழ்வில் சமர்ப்பிக்கும் பொருட்டு தமிழர் தம் பாரம்பரிய கலைகள் மற்றும் இசைக்கருவிகளின் வரலாறு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அத்தோடு எமது பண்பாட்டு கலைகளின் தொன்மையை பறைசாற்றும் நாடக மற்றும் நடன கலைஞர்களின் ஆற்றல்களுக்கு களம் அமைக்கும் மாபெரும் அரங்கமாகவும் இந்நிகழ்வு அரங்கேற காத்திருக்கின்றது.
இதன் முன்னோடியாக இடம்பெறும் உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் அம்பாரை மாவட்ட கிளை அங்குரார்ப்பணம் நிகழ்வில் அனைத்து கலைஞர்களையும் பங்கேற்குமாறு அழைக்கின்றோம்.
மேலதிக தகவல்களுக்கும் தொடர்புகளும் உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் அம்பாரை மாவட்டத்திற்கான இணைப்பாளர் உதவிக்கல்விப்பணிப்பாளர் சுந்தரம் ஸ்ரீதரன் அல்லது மாவட்ட ஊடக இணைப்பாளர் விஜயராஜா சுகிர்தகுமார் ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0773560799, 0777113659