ஆலையடிவேம்பு
பல்கலைகழக அனுமதிக்காக விண்ணப்பிக்க எதிர்பாத்துள்ள மாணவர்களுக்கு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு…..

இம்முறை (2023/2024) பல்கலைகழக அனுமதிக்காக விண்ணப்பிக்க எதிர்பாத்துள்ள மாணவர்கள் தங்கள் கற்கை நெறிகளை எவ்வாறு தெரிவு செய்வது எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் (08.06.2024) சனிக்கிழமை காலை 10.00 மணிமுதல் கோளாவில், விநாயகர் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
கருத்தரங்கு ஆலையடிவேம்பு இணையக்குழுவின் (Alayadivembuweb.lk) ஏற்பாட்டிலும் ‘சத்தியம் வாழும் போதே வாழ்த்துவோம்’ அமைப்பின் அனுசரைணயுடன் இடம்பெறவுள்ளது.
வளவாளர்களாக திருக்கோவில் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் ந.சுதாகரன் மற்றும் கண்ணகி வித்தியாலய அதிபர் த.இராசநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ள மாணவர்கள் முன்கூட்டியே தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதிவுகளுக்கு 0771925225