இலங்கை
உலக வர்த்தக மையத்தில் மயங்கி விழுந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்றா?

மாத்தறையிலிருந்து கொழும்பு உலக வர்த்தக மையத்திற்கு தனிப்பட்ட காரணங்களுக்காக வருகைத் தந்திருந்த ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் குறித்த செய்தி முற்றிலும் தவறானது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நபர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உணவு மற்றும் மதிய உணவு உட்கொள்ளாது இருந்துள்ளதாகவும், இதன் காரணமாக அவர் மயக்கமடைந்துள்ளதாகவம் வைத்தியசாலை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.