ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு இன்று….

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் இந்த வருடத்திற்கான பிரமோற்சவப் பெருவிழா நேற்று (19.08.2023) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது.
இன்று (20.08.2023) காலை 11.00 மணிக்கு திருக்கொடியேற்றப் பெருவிழா திரு.வே.சிவசம்பு வட்டவிதானை குடும்பத்தினர் பங்களிப்புடன் ஆலய மற்றும் உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ நாராயண சண்முகதாஸீஸ்வரக் குருக்கள் அவர்களினால் திருக்கொடியேற்ற நிகழ்வு பக்திபூர்வமாக இடம்பெற்றது.