இலங்கை
திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் சுதந்திரதின நிகழ்வு….

ஜே.கே.யதுர்ஷன்
இலங்கை திருநாட்டின் 74வது சுதந்திர தினம் நேற்று நாடு பூராக கொண்டாடப்பட்டது அந்த வகையில் திருக்கோவில் பிரதேச செயலகத்தில், திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் சுதந்திரதின நிகழ்வு covid-19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நேற்றய (04) தினம் கொண்டாடப்பட்டது.
இன் நிகழ்வில் தேசிய கொடி ஏற்றுதல் மற்றும் பிரதேச செயலாளரின் சுதந்திர தினம் பற்றிய சிறப்புரை, நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி மற்றும் சர்வ மத பிரார்த்தனைகள் மற்றும் மரம் வளர்ப்போம் நாட்டை காப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக வளாக சிரமதான நிகழ்வு போன்ற நிகழ்வுகள் திருக்கோவில் பிரதேசசெயலாளர் தலைமையில் இடம்பெற்றது.