பனங்காடு வைத்தியசாலை தொடர்பான போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான வெற்றி!பிரதேச வைத்தியசாலையாக நாளை முதல்…

அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இது வரை காலமும் ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு பிரிவாக இயங்கிவந்த பனங்காடு வைத்தியசாலை உண்மையில் 2006.07.10 ஆம் திகதியே பிரதேச வைத்தியசாலையாக ஏற்கனவே தரமுயர்த்தப்பட்டு விட்டது. ஆனால் அதிகாரத்தில் இருந்த ஒரு சில இந்த உண்மை மறைக்கப்பட்டு இன்று வரை அனைவரையும் நன்கு திட்டமிட்டு ஏமாற்றி முட்டாள் ஆக்கி வந்தனர்.ஆனால் அதிகாரத்தில் இருந்த ஒரு சிலரினால் இந்த உண்மை மறைக்கப்பட்டு இன்று வரை அனைவரையும் நன்கு திட்டமிட்டு ஏமாற்றி முட்டாள் ஆக்கி வந்தனர். இவ் விடயங்கள் தொடர்வாக அரசியல்வாதிகளின் கவனத்திற்கு பலமுறை எங்களால் கொண்டு சென்றும் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்கள் விடா முயற்சியால் நாளை முதல் பனங்காடு வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலையாக இயங்க இருக்கின்றது இயன் மருத்துவர் K. ஹரன்ராஜ் தெரிவிப்பு.
மேலும் குறிப்பிடுகையில், இவர்களின் ஏமாற்று வேலையை ஏற்கனவே அறிந்து கொண்ட பனங்காடு வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஒரு சிலரின் ஆதரவாலும் வைத்திய சாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ரமேஸ் மற்றும் சீலன் மற்றும் முரளீஸ்பரன் தருமரெத்தினம், கீர்த்திதாசன் கமலவன் மற்றும் சுந்தரம் ஸ்ரீ ஆகியோரின் பூரண ஒத்துழைப்பில் தொடர் விடா முயற்சியின் பயனாக வெறுமனே 4 ஆக இருந்த cader ஐ 16 ஆக உயர்த்தி அதற்கான நிதி அமைச்சின் அனுமதியையும் பெற்று பல முயற்சிகளை மேற்கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான வெற்றி கண்டுள்ளோம் .
கடந்த 2019.12.12 ஆம் திகதி கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் சுகுணன் ஐயா விடம் பனங்காடு வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான பல விடயங்களை தெளிவு படுத்தி இருந்தோம். 24 மணி நேர வைத்தியர் சேவை, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, மருத்துவ விடுதி வசதி, பல் சிகிச்சைப் பிரிவு அனைத்தையும் கோரி இருந்தோம். உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் இருந்தோம்.
தற்போது 2 வாரங்களில் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் வருகையால் தாமதமாகி இருந்த பல அபிவிருத்தி விடயங்கள் துரிதப்படுத்தப் பட்டு நாளை முதல் பனங்காடு வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலையாக இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
பல நாட்களாக அபிவிருத்திக்காக ஏங்கித் தவித்த பனங்காடு வைத்தியசாலைக்கு புத்துயிர் அளித்த கருணா அம்மான் அவர்களுக்கும் RDHS சுகுனான் குணசிங்கம் ஐயா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகளை வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் சார்பிலும் ஊர் பொது மக்கள் சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றேன் என இயன் மருத்துவர் K. ஹரன்ராஜ் .அவர்கள் எமது இணையத்தள செய்திப்பிரிவுக்கு குறிப்பிட்டார்.
மேலும், கடந்த வாரம் ஆரம்ப பௌதீக வள தேவையை நிவர்த்தி செய்ய 25 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்த முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. அத்துடன் இது போன்ற பல விடயங்கள் எதிர்காலத்திலும் நிறைவேற உதவி செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். எனவும் மேலும் வருகின்ற நான்கு ஆண்டுகளில் அபிவிருத்தி செய்ய இருக்கும் வைத்தியசாலைகளின் பெயர் பட்டியலில் எம் பனங்காடு வைத்தியசாலையும் உள்வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது எனவும் குறிப்பிட்டு இருந்தார்.