ஆலையடிவேம்பு
பனங்காடு மாதுமை உடனுறை சமேத ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலயதில் சித்தானைக்குட்டி சுவாமிகளின் குருபீட அடிக்கல் நாட்டு விழா….

சுவாமி சித்தானைக்குட்டி அவர்களின் குருபீடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (18) காலை சுப முகூர்த்த வேளையில் ஆலையடிவேம்பு பிரதேச, அருள்மிகு பனங்காடு மாதுமை உடனுறை சமேத ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தானத்தில் இடம் பெற்றது.
சித்தானைக்குட்டி அவர்கள் இந்தியாவின் இராமநாதபுர மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு வந்து பல சித்து விளையாட்டுக்களை காட்டியவராகவும் அண்மை பிரதேசமான காரைதீவில் ஜீவசமாதி கொண்டதுடன். முப்பெரும் சித்தர்களின் முதன்மையானவராகவும் காணப்படுகின்றார்.
ஆலையடிவேம்பு பிரதேச பனங்காடு, கோளாவில் ஆகிய பகுதிகளில் சித்தானைக்குட்டி சித்தர் வாழ்ந்த காலத்தில் பல சித்து விளையாட்டுக்களை காட்டிய வரலாறுகளும் அறியக்கூடியதாக இருப்பதுடன். தற்போது சுவாமியின் ஜீவசமாதியானது காரைதீவில் அமைந்துள்ள சித்தர் ஆலயத்தில் அமையப்பெற்றும் இருக்கிறது.