பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினால் ரூபா 515,000 பெறுமதியான மருந்துப்பொருட்கள் நன்கொடையாக வழங்கிவைப்பு….

ஆலையடிவேம்பு, பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினர் அமைப்பு இன்று (24.02.2023) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் ஐந்து லட்சத்து பதினைந்தாயிரம் ரூபா (515,000/-) பெறுமதியான மருந்துப்பொருட்களை நன்கொடையாக வழங்கினர்.
ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினர் குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்காகவும் நோயளர்களின் நலனுக்காகவும் பாரிய நிதியினை திரட்டி மருந்துப்பொருட்களை வழங்கி இருந்தனர்.
இவர்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் மற்றும் பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் தங்கல் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றார்கள்.
இதுபோன்ற மருந்துப்பொருட்கள் நன்கொடை செய்வது என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒன்றாக காணப்படுவதுடன், குறித்த நிகழ்வில் பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.