ஆலையடிவேம்பு
பனங்காடு சிப்பித்திடல் மயானம் பிரதேச சபை உறுப்பினர் புஸ்பராஜின் ஏற்பாட்டில் பாரிய சிரமதானம்…..

ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் புஸ்பராஜின் ஏற்பாட்டிலும் தவிசாளர் ஆரியதாச தர்மதாச தலைமையிலும் இன்றைய தினம் (01) பனங்காடு சிப்பித்திடல் மயான சுற்றுப்புற சூழலை தூய்மைப்படுத்தல் சிரமதானம் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஒத்துழைப்போடு காலை 6.30 மணிக்கு சிரமதானப்பணி ஆரம்பமாகியதுடன் பிரதேச பொது மக்களும் சிரமதானத்துக்கு தேவையான உபகரணங்களுடன் கலந்துகொண்டு தூய்மைப்படுத்தல் பணியில் இணைந்துகொண்டிருந்தனர்.
குறித்த சிரமதான பணியில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.