ஆலையடிவேம்பு
பனங்காடு உப்போடையில் மீன் பிடிக்க சென்றவர் ஒருவரின் சடலம் மீட்பு!

-ம.கிரிசாந்-
பனங்காடு உப்போடையில் மீன் பிடிக்க சென்ற ஆண் ஒருவரின் சடலம் இன்று (08) காலை மீட்கப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச,பனங்காடு உப்போடை நீர் பகுதியில் மீன் பிடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீன் பிடிப்பதற்காக நேற்று மதியம் குறித்த நபர் தனியாக குறித்த பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிள் மூலமாக சென்றதாகவும் மீள வீடு திரும்பாத நிலையிலே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோளாவில் – 02, மகிழ்வாகனம் வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய இராமலிங்கம் சிவகுமார் என்பரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அக்கரைப்பற்று பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.