வரலாற்றில் சாதனை! பாடசாலையில் இருந்து இரு மாணவர்கள் தோற்றி இரு மாணவர்களும் சிறப்புச் சித்தி!!! ஆலையடிவேம்பு சின்னமுகத்துவார பாடசாலை.

ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சின்னமுகத்துவாரம் திகோ / சென் ஜோண் வித்தியாலயத்தில் இருந்து 2019 தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு செல்வன் ஜீ .அபினாஸ் (162) மற்றும் செல்வன் வி. நிதுஜன் (156) எனும் இரு மாணவர்கள் தோற்றி இரு மாணவர்களும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சிறப்புச் சித்தியடைந்து தங்கள் பாடசாலைக்கு வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
ஆலையடிவேம்பு பிரதேச பகுதியில் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் அமைந்துள்ள பின்தங்கிய பாடசாலையில் இருந்து இரண்டு மாணவர்கள் தோற்றி இரண்டு மாணவர்களுமே சித்தியடைந்தமை மிகவும் பாராட்டத்தக்கது.
இந்த வரலாற்றில் சாதனையானது அடிப்படை வசதிகள் கூட போதியளவு இல்லாமல் கிடைக்கப்பெற்ற வளங்களை வைத்துக்கொண்டு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பாடசாலை ஆசிரியர் செல்வி த. தட்சாயினி , அதிபர் திருமதி பவானி தர்மதாச, பிரதி அதிபர் திருமதி சு பிரணவநாதன் அவர்களின் அயராத முயற்சியினால் இச்சாதனை நிலைநாட்டப்பட்டது.
மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் பின்தங்கிய பாடசாலையாக இருக்கின்ற திகோ / சென் ஜோண் வித்தியாலயம் சிறந்த பாடசாலை என்ற பார்வையோடு அனைவராலும் பார்க்கப்படவேண்டும் என்பதே எங்கள் ஆசை என்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கூறியதோடு பிரதேச மக்கள் மற்றும் அதிகாரிகள் எங்கள் பாடசாலையினை உயர்ந்த என்னோடத்துடன்பார்க்கவேண்டும் மற்றும் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு உதவுமாறும் தங்கள் கருத்துக்கள் வெளிப்படுத்தினார்கள் .