இலங்கை
Trending

பண்டிகை காலத்தில் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் !

புத்தாண்டு காலத்தில் திடீர் விபத்துக்கள் காரணமாக அரச வைத்தியசாலைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.

சாதாரணமாக வாராந்தம் திடீர் விபத்துக்கள் காரணமாக அரச வைத்தியசாலைகளில் 20,000 – 24,000 வரையானவர்கள் உள்நோயாளர்கள் பிரிவில் சிகிச்சைப் பெறுகின்ற போதிலும், ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 8-16 வரையான பண்டிகைக் காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 22,000 இலிருந்து 28,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலத்தில் புத்தாண்டின் போது 28,000 முதல் 30,000 வரையிலானவர்கள் விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.

வீதி விபத்துகள், விலங்கு கடி, விஷம் உடலில் சேர்தல் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் இந்த விபத்துகள் ஏற்படுவதாக தெரிவித்தார்.

இந்த நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பெரும்பாலான நோயாளிகள் விபத்துகள் காரணமாக அனுமதிக்கப்படுவதாகவும், இது வருடத்திற்கு சுமார் ஒரு மில்லியன் ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டில் இது 1.3 மில்லியனுக்கும் அதிகமாக காணப்பட்டதாகவும், 2020-2021 ஆம் ஆண்டில் இந்தத் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டாலும், இந்த எண்ணிக்கை 2022-2023 ஆம் ஆண்டில் மீண்டும் அதிகரிப்பைக் காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்துவரும் 5-10 வருடங்களுக்குள் இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும், தற்போதைய கணக்கின்படி இது சுமார் 2 இலட்சத்தை அண்மிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு 6 பேரில் ஒருவர் விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும், இந்த விபத்துக்கள் ஒவ்வொன்றும் தடுக்கக்கூடியவை என்றும் விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.

பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் 140,000-150,000 பேர் வரை இறக்கின்றனர் என்றும் விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த இறப்புகளில் 7 வீதமானவை விபத்துக்களால் ஏற்படுவதாகவும் கூறினார்.

இதனால் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் பாதுகாப்பான இடங்களில் விடுமுறையை களிக்குமாறும் விசேட வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker