அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – நால்வர் வைத்தியசாலையில்…

வி.சுகிர்தகுமார்
காயமடைந்தவர்களில் மூன்று ஆண்கள் உட்பட பெண்னொருவரும்; என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னால் சென்று கொண்டிருந்த வாகனமொன்றை முந்தி செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
கோளாவில் பிரதேசத்தில் இருந்து அக்ககரைப்பற்றை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனமொன்றை முந்தி செல்ல முற்பட்டபோதே எதிர்த்திசையில் அக்கரைப்பற்றில் இருந்து கோளாவில் பிரதேசத்தை நோக்கி குழந்தையொன்றுடன் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற இடத்தில் பழவகைகளும் பாதணிகளும் வீசப்பட்டிருந்ததை காண முடிந்ததுடன் இரு மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதத்துக்குள்ளானதை அவதானிக்க முடிந்தது.
விபத்து தொடர்பில் அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.