இலங்கை
வியூகம் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் நஷ்டத்தை இலாபமாக்குவது எப்படி இலவச தொழில் வழிகாட்டல் செயலமர்வு

வியூகம் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் நஷ்டத்தை இலாபமாக்குவது எப்படி எனும் தொனிப்பொருளில் இலவச தொழில் வழிகாட்டல் செயலமர்வு (12) சனிக்கிழமை சாய்ந்தமருது பேல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கருத்தரங்கின் வளவாளராக டுபாய் நாட்டின் அக்ரோ டேர்ப் நிறுவனத்தின் தலைவர் அஹமட் றசீன் கலந்து கொண்டு தனது சிறந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இக்கருத்தரங்கு தொழில் முயற்சியாளர்களுக்கும், தொழிலில் ஈடுபடவுள்ளவர்களுக்கும் மிகவும் பிரயோசனமான இருந்தது.
இந் நிகழ்வில் ஆலையடிவேம்பில் அமைந்துள்ள Ec college இன் பணிப்பாளர் திருமதி ரமேஸ் நியோமி, Ec college மாணர்கள் கலந்துககொண்டு சிறப்பித்தனர்.