நாவற்காடு பகுதியில் வீடொன்று எரிந்து தீக்கிரை, உடமைகள் அனைத்தையும் இழந்திருக்கும் குடும்பம்!!!

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் நாவற்காடு, பல்தேவைக்கட்டிடத்திற்கு அருகாமை வீதியில் அமைந்துள்ள வீடொன்று இன்று (02) எரிந்து தீக்கிரை.
குறித்த வீட்டில் கணவன் மனைவி இருவரும் வசித்து வந்த நிலையில் காலையிலேயே கணவன் வழமை போன்று தொழிலுக்கும், மனைவி அருகில் இருந்த உறவினர் வீட்டிற்கும் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் தீ ஏற்பட்டுள்ளதுடன் தீயை கட்டுப்படுத்த அயலவர்கள் முயற்சித்த போதிலும் வேகமாக பரவிய தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வீடு எரிந்து சேதமடைந்துள்ளது.
தீயில் வீட்டில் இருந்த இக் குடும்பத்தினரின் வாழ்வாதாரமாக இருந்து வந்த தொழிலுக்காக பயன்படுத்தும் பொருட்கள் மேலும் உடைகள், ஆவணங்கள் என அனைத்தும் எரிந்து தீக்கிரையாகியுள்ளது.
இவ்வாறு தீ அனர்த்தத்தினால் அனைத்தையும் இழந்து மிகவும் கஷ்டத்தில் வாழும் குடும்பத்திற்கு சமூக அமைப்புக்கள் முன்வந்து தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதற்குரிய தேவைப்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றது.