மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் அனுசரணையில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் நிவாரணப்பணி

வி.சுகிர்தகுமார்
கொரோனா அச்சம் காரணமாக தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப்பணிகளில் இந்து அமைப்புக்களும் அம்பாரை மாவட்டத்தில் கைகோர்த்து செயற்படுகின்றன.
இதற்கமைவாக மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் அனுசரணையில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஊடாக பெறப்பட்ட 150 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில பிரிவுகளில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
அக்கரைப்பற்று விபுலானந்தா இல்லத்தின் ஸ்தாபகரும் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவருமான இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில்
இடம்பெற்ற நிவாரணப்பணிகளில் மன்றத்தின் நிருவாகத்தினர் கலந்து கொண்டு நிவாரணப்பொருட்களை வழங்கி வைத்தனர்.
கொரோனா அச்சம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முதல் தடவையாக முகக்கவங்களை வழங்கும் பணியினை ஆரம்பித்து வைத்த இந்து இளைஞர் மன்றத்தினர் தற்போது நிவாரணப்பணிகளை ஆரம்பித்துள்ளதுடன் தொடர்ந்தும் இப்பணியை பல பிரதேசங்களுக்கு முன்கொண்டு செல்ல தீர்மானம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.