நாளை முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பம்: MOH ஆலையடிவேம்பு.

-கிரிசாந் மகாதேவன்-
எமது நாட்டிலும் எமது பிரதேசத்திலும் கொரோனா தொற்றாளார்களின் எண்ணிக்கையும், மரணங்களின் வீதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராவிட்டால் எமது பிரதேசமும், முழு நாடும் மேலும் பாரிய அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஒரு வழி தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் ஆகும்.
அந்த வகையில் எமது பிரதேசத்தில் நாளை (30.08.2021) அதாவது திங்கள்கிழமை முதல் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத (முதலாவது தடுப்பூசி) 30 வயதிற்கு மேற்பட்ட நபர்களும் மற்றும் இரண்டாவது தடுப்பூசியினை பெற எதிர்பார்த்தவர்களும் நாளை முதல் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளலாம்.
30 வயதிற்கு மேற்பட்ட ஆண்,பெண் இருபாலாரும் இவ் அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் தொடர்பான மேலதிக விபரம் இணைக்கப்பட்டுள்ளது.